
|
About
Writer Sujatha
Contact
Information
Writer Sujatha
No 19/32 C.G.Road
Nungambakkam
Chennai-34
Tamilnadu-India
Phone:+91-44-42280024
Email:
[email protected]

|

|
சென்ற வாரம்
2
புத்தக சந்தையில் இந்த ஆண்டு நாற்பது லட்சம் புத்தகங்கள்
வைத்திருக்கிறார்களாம். நல்ல செய்தி! அவைகளில் தமிழ் புத்தகங்கள்
எத்தனை என்ற கணக்கு விவரம் இல்லை. என் கணிப்பு இரண்டு லட்சம்
இருக்கலாம்.
பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியின் பெரிய
மைதானத்தில் வைத்திருக்கிறார்கள். நல்ல பார்க்கிங் வசதிகள் உள்ளன.
தினம் ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
புத்தகச் சந்தை சென்னையில் பொங்கல் சமயத்தில் முக்கியமான ஒரு
நிகழ்வாக மாறிவிட்டது. கோவை, மதுரை, திருச்சி, நெய்வேலி
நகரங்களிலும் புத்தகச் சந்தை வருடாந்திர நிகழ்வாகிறது. மெல்ல
எல்லா சிறுநகரங்களையும் இணைத்து சந்தைகள் நிகழும் மாதங்களையும்
கொஞ்சம் வேறுபடுத்தினால் வருடம் முழுவதும் புத்தகங்கள் நகர்ந்து
ஓர் ஆண்டுக்குள் ஒரு பதிப்பு விற்றுத் தீரும்.
தமிழ் புத்தக வியாபாரம் அவ்வளவு லாபகரமானதல்ல. போட்ட பணம்
திரும்பிவர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாகிறது. கவிஞர்கள் பலர்
தங்கள் புத்தகங்களை வெளியிடுவதற்காக பதிப்பகம் தொடங்குகிறார்கள்.
புத்தக வியாபாரத்தின் நௌ¤வு சுளிவுகள் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.
'நூறு புத்தகங்கள் வெளிவந்த பின்தான் லாபம் பார்க்கலாம்; ஒரு
புத்தகம் போதாது' என்பார்கள். இருந்தும் தமிழ்நாட்டில் ஓரிரு
புத்தகம் வெளியிடுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.
- சுஜாதா
(இந்த பகுதி ஒவ்வொரு
வாரமும் தொடரும்) |