|
சொர்க்கத் தீவு
இந்தக் கதை 'ஸயன்ஸ் ஃபிக்ஷன்' என்கிற ரீதியில் நான் முயன்ற முதல் தொடர்கதை. இதற்கு
முன் இரண்டு மூன்று சிறுகதைகள் இந்தவகையில் எழுதி இருக்கிறேன். குறிப்பாக 'ஒருநாள்'
(கல்கி தீபாவளி மலர் 1971)
பெரும்பாலும் எல்லா ஸயன்ஸ் ஃபிக்ஷன் முயற்சிகளிலும் சில பொதுவான அம்சங்கள்
இருக்கின்றன.
1. எதிர்காலத்தைப் பற்றி அவை சொல்லும்.
2. இன்றைய சமுதாய அமைப்புக்குப் பதிலாக, மாறுதலாக ஒரு புதிய அமைப்பை-ஒருவித Utopia-அவைகளில்
சொல்வார்கள்.
3. அந்தப் புதிய அமைப்புக்கு எதிராக ஒருவன் முயற்சி செய்வான்.
'சொர்க்கத் தீ'வில் இந்த மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தைப் பற்றித்தான்
சொல்ல முயன்றிருக்கிறேன்.
| Available Options: |
| Download: |
|
|