|
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக
வெளிவந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து
கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம்
நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். 'விஞ்ஞானக் கதை' என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக
இருக்கவேண்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தப்பு. விஞ்ஞானக் கதை
என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது.
அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.
| Available Options: |
| Download: |
|
|