தப்பித்தால் தப்பில்லை! பாலகிருஷ்ணனைப் பாருங்கள். ஐந்தடி நாலங்குலம் உயரம். மெலிதான கரங்கள். தூரத்திலிருந்து பார்த்தால் பையன்போல இருப்பான். சன்னமாக குரல், சாது, பிறர் வம்புக்குப் போகமாட்டான்.