|
வானமென்னும் வீதியிலே
'வானமென்னும் வீதியிலே...' 1971ல் எழுதப்பட்டபோது விமான நிலையங்களில்
எக்ஸ்ரே, மெட்டல் டிட்டெக்டர் போன்ற சாதனங்கள் இருக்கவில்லை. இன்று இந்த நாவல்
எழுதப்பட்டால் இரண்டாம் அத்தியாயத்தைப் பெரும்பாலும் மாற்றி எழுதவேண்டும். எழுதலாம்.
ஆனால் இந்த நாவலின் முக்கிய செய்தி ஒரு நெருக்கடி வேளையில் வானத்தில் விமானத்தில்
சில மனிதர்களின் தீரச் செயல்கள் எப்படி வெளிப்படுகின்றன என்பதே. இந்தச் செய்தியை
சொல்வதற்கு இரண்டாம் அத்தியாய மாற்றம் தேவையில்லை. ஏனெனில் இன்றைக்கும் விமான
நிலையங்களில் பாதுகாப்பு சாதனங்கள் அத்தனை இருந்தும் 'ஹைஜாக்' சம்பவங்கள் அடிக்கடி
ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ராஜேந்திரன், அவினாஷ், தேவி போன்ற சாதாரண
மனிதர்கள் சரித்திரத்தில் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
| Available Options: |
| Download: |
|
|