|
ஜீனோம்
'ஜீனோம்' என்னும் இந்தப் புத்தகம் மனித இனத்தின் பிறப்பணுவின் அமைப்பைக் கண்டறிந்த சாகசக் கதையையும், மனித குணங்கள் நம் மரபணுவில் எப்படிப் பொதிந்திருக்கின்றன என்பதையும், ஒரு கதைபோல் சுவையாகச் சொல்கிறது. இந்தப் புத்தகம் அறிவியலை எளிதாகச் சொல்ல தமிழ்மொழியில் தடையில்லை என்பதை மறுபடியும் நிரூபித்துக் காட்டுகிறது.
டிஎன்ஏ என்னும் மரபணுவின் க்ரோமோசோம்களில் சிக்கலான கூட்டணுவில் ஆயிரமாயிரம் பிறப்புச் செய்திகள் பொதிருந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. உலகின் பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஒத்துழைத்து நடத்திய Human Genome Project-ன் முதல் முடிவுகளிலேயே கிடைத்த ஆச்சரியங்களை வருணிக்கிறது இந்தப் புத்தகம்.
சுஜாதா ஒரு கணிப்பொறித்துறை சார்ந்த இன்ஜினியரும் எழுத்தாளருமாவார். இதுவரை அறிவியல் சார்ந்த இருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 'கடவுள் இருக்கிறரா?' என்னும் நூல் இவரது அண்மைக் காலத்து அறிவியல் நூல்.
| Available Options: |
| Download: |
|
|