|
காகிதச் சங்கிலிகள்
விமலா ஒரு ரூபாய்க்கு நாலணா சில்லரையாக மாற்றி
வைத்துக் கொண்டு டாக்டர் ரங்காச்சாரியின் சிலையைக் கடந்தாள். கம்பிகளால்
தடுக்கப்பட்ட காரிடாரில் நடந்தாள். அதன் இறுதியில் கதவு சார்த்தி காக்கிச்
சட்டைக்காரன் ''போங்கய்யா, போங்கம்மா?'' என்று சிலரை அதட்டிக் கொண்டிருந்தான். ''உள்ள
உடறதில்லைன்னு சொன்னனில்லை?'' விமலா நாலணாவை எடுத்துத் தயாராக நீட்ட அதை அவன் பூச்சி
பிடிக்கும் பல்லிபோலக் 'கபக்' என்று கவர்ந்து கொண்டு கிராதி கேட்டைத் திறந்து அவளை
மட்டும் அனுமதித்து ''அடப்போங்கய்யான்னா!'' என்று அதட்டலைத் தொடர்ந்தான்.
| Available Options: |
| Download: |
|
|