|
விருப்பமில்லாத் திருப்பங்கள்
அந்த மாணவன் நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வில் அவனுக்கு வெற்றி நிச்சயம்.
வேறு ஒருவனுக்கு உதவப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான்.
இந்த விபத்துக்குப் பின் அவன் பாதம் பதிக்கும் இடமெல்லாம் வழுக்குகிறது. எங்கெங்கோ
இழுத்துச் செல்கிறது.
அநியாயத்துக்கு துணைபோவது அவனுக்கு சம்மதமே இல்லை. ஆனாலும் அவன் அகப்பட்டுக் கொண்ட
சூழலும், அவர்கள் தந்த லாகிரியும், அவனை அவர்கள் பாடும் பதத்திற்கு ஏற்ப சுழல
வைக்கின்றன. தன்னை, தன் வசத்துக்குக் கொண்டுவர முயலும் அவன் நல்ல தன்மைகளை மீறிக்
காரியங்கள் நடந்துவிடுகின்றன. இளைஞன் சிக்கியுள்ள சூழ்நிலையை சுஜாதா
சித்திரிக்கிறார் என்பதைவிட எச்சரிக்கிறார் என்பதே இந்நாவலின் வெற்றியாகும்
| Available Options: |
| Download: |
|
|