விரும்பிச் சொன்ன பொய்கள் 1987-ல் 'குங்குமச் சிமிழ்' இதழுக்காக எழுதப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்தும் சுவாரஸ்யமான கதைகளுக்கு செலாவணி இருப்பது என் போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருகிறது. இந்த நாவல் இறுதியில் ஒரு 'ஆம்' 'இல்லை' என்ற வார்த்தையின் தேர்வில் வந்து கதை முடிகிறது. வாசகர்களிடம் முடிவை விட்டுவிடுவது எனக்குப் பிடித்த உத்திகளில் ஒன்று.