எப்போதும் பெண் 'எப்போதும் பெண்' 1982-83ல் 'மங்கையர் மலர்' பத்திரிகையில் தொடராக வந்தது. இதை என் சிறந்த நாவல் என்று சொல்பவர்கள் உண்டு. ஆணாகிய நான் எப்படி ஒரு பெண்ணின் அந்தரங்க விஷயங்களை அறிய முடிந்தது என 'மங்கையர் மலர்' ஆசிரியை திருமதி மஞ்சுளா ரமேஷ் உட்பட பலர் வியந்தார்கள். இதற்கு பதில் எளிமையானது. Simon de Beauvoirன் The Second Sex என்கிற புத்தகம் எனக்கு மிகவும் பயன்பட்டது.